சூப்

பாலக்கீரை சூப்

பாலக்கீரை சூப்

தேவையான பொருட்கள்

பாலக்கீரை 2 கட்டு (ஆய்ந்தது)
வெண்ணெய் 1 தேக்கரண்டி
சிறிய வெங்காயம் 10 எண்ணிக்கை
(பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் 1
இஞ்சி (1/4) கால் துண்டு
உப்பு தேவைக்கேற்ப
மக்காச்சோளம் 1 தேக்கரண்டி
பால் 1 கப்

செய்முறை

  1. பிரஷர் குக்கரில் வெண்ணெயை சூடாக்கி, வெங்காயத்தை 2 நிமிடம் வதக்கவும்.
  2. கீரையை சேர்த்து, சுருங்கும் வரை வதக்கவும்.
  3. தேவையான அளவு தண்ணீர், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து மூடி வைக்கவும்.
  4. ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து, விசில் இறங்கியவுடன் மூடியைத் திறக்கவும்.
  5. மிளகாய் மற்றும் இஞ்சியை எடுத்துவிட்டு, கீரையை வேக வைத்த தண்ணீரோடு அப்படியே மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.
  6. தேவைகேற்ப தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, மீண்டும் சூடாக்கவும்.
  7. ஒரு கப் பாலில் மக்காச் சோள மாவை கரைத்து, சூப்பில் ஊற்றி நன்றாக கலக்கவும்.
  8. கொதிக்க விடாமல், சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்:

  • கீரையின் வகை மற்றும் அளவை பொறுத்து தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
  • மிளகாய் மற்றும் இஞ்சியின் அளவை உங்கள் சுவைக்கேற்ப மாற்றி கொள்ளவும்.
  • பாலுக்கு பதிலாக தயிர் சேர்த்தும் செய்யலாம்.
  • மக்காச் சோள மாவுக்கு பதிலாக அரிசி மாவு சேர்த்தும் செய்யலாம்.